லண்டன் - பிபிசி 100 ஆண்டுகள் பழமையானது
London -BBC க்கு 100 வயது. 1922 October 22 அன்று British Broadcasting company என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட BBC, தனது நூற்றாண்டு விழாவினைக் கோலாகமாகக் கொண்டாடி மகிழப்போகிறது. இதன் ஆரம்பகால பங்குதாரர்கள் அறுவரில் ஒருவரான, Guglielmo Marconi அவர்களைத் தான், ‘வானொலியின் தந்தை’ என, நாம் போற்றிக் கொண்டாடுகிறோம். அவருக்கு முன்னே வாழ்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட (இந்தியாவின் இயற்பியல் விஞ்ஞானி ‘ஜகதீஷ் சந்திரபோஸ்’ உட்பட) விஞ்ஞானிகளது கண்டுபிடிப்புகளை ஆதாரமாய்க் கொண்டு, அவர் தனது முதலாவது பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்பினை வெற்றிகரமாக நடத்திய ‘வானொலியின் நதிமூலமான’ அந்த, முதலாவது கலையகத்தினை -MARCONI HUT- நேரில் சென்று காணும் பாக்கியம், ஆறு ஆண்டுகளுக்கு முன் எனது இனிய நண்பர் ஜெயபாலதேவன் மூலமாக அடியேனுக்குக் கிடைத்தது. இங்கிலாந்தின் Chelmsford எனும் இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில், அந்தக் கலையகம், முதலாவது ஒலிபரப்பிக் கருவி- Vaccum tube transmitter- ஒலிவாங்கிகள், அங்கு பயன்படுத்தப்பட்ட Bicycle போன்றவற்றை ஒரு குழந்தையின் மன நிலையில் தொட்டுத் தொட்டுப் பார்த்து பரவசமடைந்த நினைவுகள் இன்னும் இந்த நிழற் படங்களைப்போல் பசுமையாக நிலைத்திருக்கின்றன. ( இது உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நாள் எனினும் அதற்கு அடுத்த November மாதம் 14ம் திகதிதான், Marconi யின் 2LO எனும் கலையகத்திலிருந்து முறையான ஒலிபரப்பு தொடர ஆரம்பித்தது) BBC யை அடுத்து மூன்றே மூன்று நாடுகள் தான் வானொலியை ஆரம்பித்தன. ஜப்பான் - பெரு - இலங்கை அதிலும் தென்கிழக்காசியாவிலேயே முதன் முதலில் இலங்கையில்தான் வானொலி ஆரம்பமானது. December 16, 1925 அது மட்டுமல்ல ‘தேமதுரத் தமிழோசையை வானலைகளில் பரப்பிய முதல் வானொலியும் நமது ‘இலங்கை வானொலியே’ இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் நமது வானொலியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டுமே…!!! தயாராகிவிட்டோமா?