வலைப்பதிவு விவரங்கள்

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) 35ஆவது தமிழ் விழா 2022 ஜூலை

பின் செல்ல
IMG

வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் (FeTNA) 35ஆவது தமிழ் விழா 2022 ஜூலை 1ம் திகதி முதல் 4ம் திகதி வரை, St.John's University அரங்கில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் 2022  ஜூலை 2ம் திகதி என் நண்பன், உங்கள் அன்பு அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் எழுதிய  "வானலைகளின் ஒரு வழிப்போக்கன்" நூல் வெளியிடப்படுகிறது.

கலைத்துறை சார்ந்த பரம்பரைப் பின்னணி எதுவும் இல்லாமல்  தன் சுய முயற்சியாலும், நல்லவர்களின் ஆசிகளோடும், ஆதரவோடும் இந்த நிலைக்கு உயர்ந்துள்ள என் நண்பன் எழுதிய நூல் அமெரிக்காவில் 5000 தமிழர்கள் முன்னிலையில் வெளியிடப்பட இருக்கிறது. நினைக்கும் பொழுது மனது மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது. அதே நேரம், இதை எல்லாம் பார்த்து ரசித்து, மகிழ்ந்து, பெருமை கொண்டாடிட அவரைப் பெற்ற தாய் இன்று உயிரோடு இல்லையே என்பதை நினைக்கும் பொழுது என் மனம் வேதனை அடைகிறது. வானலைகளில் வலம் வந்த ஒரு வழிப்போக்கனின் வரலாறு மட்டுமல்ல இந்த நூல்.
இந்த நூலில் துன்பியல் நிகழ்வகள் இருக்கும், மனம் மகிழும் நினைவுகள் நிறைந்திருக்கும்.

வானொலி வரலாற்றில் பலர் அறியாத பல விடயங்கள், ஆராயப்பட்டுத் திரட்டப்பட்ட ஆவணங்களின் களஞ்சியமாய் இருக்கும் இந்த நூல். "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற முதுமொழிக்கேற்ப தான் உலகை சுற்றிப் பார்த்த வேளைகளில் தான் கண்ட அற்புதங்கள், அதிசயங்கள், ஆச்சரியப் படத்தக்க பல விசயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் இந்த நூல்  இன்றைய தலைமுறைக்கு மட்டுமல்ல, நாளைய தலைமுறைக்கும் கண்டிப்பாகப் பயன்படும் நூலாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த நூல் இலங்கையிலும் அறிமுக விழா நடத்தப்பட்டு வெளியிடப்படும்.